

வானியல் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதில் இளைய தலைமுறையினர் பலருக்கும் கூடுதல் ஆர்வம் இருக்கிறது. முன்பு வானியல் நிகழ்வுகளை வெறும் கண்களால் காணும் வாய்ப்புகள் அதிகம் இருந்தது. ஆனால், நகரமயமாக்கல், தொழில் புரட்சி காரணமாக அதிகரித்த காற்று மாசு, ஒளி மாசினால் இன்று வெறும் கண்காளால் வானியல் நிகழ்வுகளைக் காண்பது தற்போது அரிதாகிவிட்டது.
எனினும், வானியல் அறிவியல் மீதான ஈடுபாடு காரணமாக, பலரும் நவீனமயமான, விலை அதிகமுள்ள தொலைநோக்கிகளை வீடுகளில் வாங்கி வைத்து நட்சத்திரங்களையும் கோள்களையும் ரசிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ளனர். ஆனால், இதுபோன்ற அனு பவத்தை, சில மெய்நிகர் இணையப் பக்கங்களும் பயனர்களுக்கு அளித்து வருகின்றன.