

செயற்கை நுண்ணறிவுக்கான (ஏஐ) செவை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையே போட்டி அதிகரித்துள்ள நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ-யை கையில் எடுத்துள்ளன. இப்போட்டியில் மெட்டா நிறுவனம் ஏற்கெனவே குதித்துவிட்டது.
மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் இந்த ஆண்டு ஜனவரியில் ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ என்கிற குழுவை உருவாக்கினார். மனித மூளையை மிஞ்சும் நுண்ணறிவுடன் ஏஐ அமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சியின் முயற்சியாக மெட்டா நிறுவனம் ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ ஆய்வகத்தை உருவாக்கியது.