

சென்னை: இந்தியாவில் லாவா நிறுவனம் ஸ்டார்ம் பிளே என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதோடு சேர்த்து ஸ்டார்ம் லைட் என்று மாடலையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே பட்ஜெட் விலையில் சந்தையில் விற்பனை ஆகிறது.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா ஸ்டார்ம் பிளே மற்றும் ஸ்டார்ம் லைட் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இது ஸ்டார்ம் சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போன்களாக அமைந்துள்ளது. இந்த இரண்டு போன்களுக்கும் ஒரு ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்: