

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ கே13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ‘K’ சீரிஸ் போன்களின் வரிசையில் ‘கே13’ வெளிவந்துள்ளது. வெட் டச் (Wet Touch) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். 24-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது. மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.
சிறப்பு அம்சங்கள்: