

அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படுமா அல்லது வேறு நிறுவனம் வசமாகுமா என்பது தெரியவில்லை. அந்நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் அதிபர் டிரம்ப்பால் 75 நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், பல்வேறு யூகங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இதனிடையே டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் நட்சத்திர யூடியூபர் மிஸ்டர் பிஸ்டும் சேர்ந்திருக்கிறார். இதனிடையே அமெரிக்கர்கள் மத்தியில் சீன மொழி கற்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. டுவாலிங்கோ (Duolingo) எனும் மொழிப் பயிற்சி செயலி தனது மேடையில் சீன மொழிக் கற்க விரும்பும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை இருநூறு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.