பொருள் புதுசு: மாத்திரை நினைவுபடுத்தி

பொருள் புதுசு: மாத்திரை நினைவுபடுத்தி
Updated on
1 min read

தொடர்ச்சியாக மாத்திரைகளை எடுத்துக்கொள்வோருக்கு உதவும் வகையிலான கருவி. மாத்திரையை எடுக்கவேண்டிய நேரம், சரியான மாத்திரை உட்கொள்ளப்பட்டதா போன்றவற்றை தெரிவிக்கும். ஹாங்காங்கின் குவாலைஃப் நிறுவன தயாரிப்பு.

ஸ்மார்ட் துணிக்கூடை

smartjpg100 

துணிகளில் ரேடியோ அலைவரிசை பட்டைகளை ஒட்டி இந்தக் கூடையில் போடுவதன்மூலம் எந்த ஆடைகள் அணிவதற்கு ஏற்றவையாக உள்ளன, எவற்றைத் துவைக்கவேண்டும் போன்ற தகவல்களை ஸ்மார்ட் ஃபோனில் பெற முடியும். லாண்டரிபால் என பெயரிடப்பட்டுள்ளது.

இசை பந்து

isaijpg100 

இந்த பந்தை தரையை நோக்கி வீசும்பொழுதும், சுவரில் எறியும்பொழுதும் நாம் தரும் அழுத்தத்துக்கு ஏற்ப இசையை உருவாக்கும். டென்னிஸ் போன்ற விளையாட்டுகளின் போது இதனைப் பயன்படுத்தினால் இசையுடன் சேர்ந்து விளையாடலாம். ஆட்பால் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எடை குறைப்பான்

edaijpg100 

நமது மூச்சுக் காற்றை இந்த கருவியினுள் ஊதுவதன் வழியாக எவ்வளவு கார்போஹைட்ரேட்கள் மற்றும் கொழுப்பை நமது உடல் எரித்துள்ளது என்பதை அறிந்துகொள்ளமுடியும். கலோரி எரிப்புக்கு ஏற்ப நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுப் பொருட்கள் எவை, எந்த வகையான உடற்பயிற்சிகளைச் செய்யலாம் போன்ற பரிந்துரைகளையும் இந்தக் கருவி அளிக்கிறது.  எடை குறைப்பில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஏற்றது. கூகுள் ஃபிட், ஆப்பிள் ஹெல்த் போன்ற செயலிகளுடன் இணைத்து பயன்படுத்தும் வசதி உடைய இந்தக் கருவியை நியூயார்க்கைச் சேர்ந்த லூமென் நிறுவனம் தயாரித்துள்ளது.

நீச்சல் ஜெட்பேக்

jetpackjpg100 

நீருக்கடியில் நீந்துவதற்கு பயன்படும் வகையில் அமெரிக்க பல்கலைக் கழக மாணவர்கள் ஜெட்பேக் ஒன்றை உருவாக்கியுள்ளனர். விமானங்களின் புரபல்லர்கள் காற்றினை வெளித்தள்ளுவதைப்போல நீரினை மிக வேகமான வெளியேற்றும். இதனால் ஒரு மணி நேரத்தில் 8 கிலோ மீட்டர் நீருக்கடியில் நீந்தலாம். லித்தியம் பேட்டரியில் இயங்குகிறது. 2019-ம் ஆண்டில் விற்பனைக்கு வர உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in