லாவா யுவா 4 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

லாவா யுவா 4 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்தியாவில் லாவா யுவா 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா யுவா 4 அறிமுகமாகி உள்ளது. இது என்ட்ரி செக்மென்ட் பயனர்களை கருத்தில் கொண்டு சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இது 4ஜி நெட்வொர்க்கில் இயங்கும். சிறப்பு அம்சங்கள்:

  • 6.56 இன்ச் பன்ச் ஹோல் ஹெச்டி டிஸ்பிளே
  • யுனிசோக் டி606 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 4ஜிபி ரேம்
  • 64ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ்
  • பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 10 வாட்ஸ் சார்ஜர்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • மூன்று வண்ணங்களில் இந்த போன்
  • வெளிவந்துள்ளது
  • இந்த போனின் விலை ரூ.6,999

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in