

ரத்தத்தின் நிறம் சிவப்பு. ஆனால், சில உயிரினங்களுக்கு ரத்தத்தின் நிறம் மாறுபடுகிறது. குறிப்பிட்ட சில பல்லி வகைகளின் ரத்தம் பச்சை நிறமாக உள்ளது. ரத்த ஓட்டத்துடன் வெளியேறும் கழிவுகளே இதற்குக் காரணம். இன்னும் சில உயிரினங்கள் நீல நிற ரத்தம் பெற்றுள்ளன. இப்படி விலங்கினங்களின் ரத்த நிறங்கள் பற்றியும் அதற்கான காரணம் பற்றியும், அன்னா ரோத்ஸில்ட் உருவாக்கியுள்ள யூடியூப் வீடியோ அழகாக விளக்குகிறது.