

வேலைவாய்ப்புத் தளங்களைப் பொறுத்தவரை, அனைத்துவிதமான வேலைகளையும் பட்டியலிடும் பொதுவான வேலைவாய்ப்புத் தளங்கள் பல இருக்கின்றன. அந்த வகையில், ஐடியலிஸ்ட்.ஆர்க் இணையதளம் லட்சியப் பணிகளைத் தேடித் தருகிறது. உலகில் அதிக ஊதியம் தரும் கார்ப்பரேட் மற்றும் ஐடி போன்ற பணிகளை நாடுபவர்கள் இருக்கின்றனர். அதே போலவே, வேலை என்பது ஊதியம் அளித்தால் மட்டும் போதாது மனதுக்கு நெருக்கமான கொள்கைகள், நோக்கங்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தொண்டு நிறுவனப் பணிகள், தன்னார்வப் பணிகள் போன்றவற்றை விரும்பலாம். இத்தகைய பணி வாய்ப்புகளை அடையாளம் காண உதவுகிறது இந்த இணையதளம். நல்லது செய்ய விரும்பும் நபர்களை அதற்கான பணிகள் மற்றும் வாய்ப்புகளுடன் இணைக்கிறது இந்த இணையதளம். இந்த வகையிலான ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் உள்ள வேலைவாய்ப்புகளை இத்தளம் பட்டியலிடுகிறது.
இணைய முகவரி: https://www.idealist.org/en/?type=JOB