தொழில்நுட்பம்
தளம் புதிது: ‘கிரிப்டோ’ வேலை வேண்டுமா?
‘பிட்காயின்’ உள்ளிட்ட ‘கிரிப்டோ’ நாணயங்களில் உங்களுக்கு ஆர்வம் உண்டா? இந்தத் துறையில் வேலைவாய்ப்பைப் பெற விருப்பம் இருக்கிறதா? அப்படியெனில் ‘ஆல் கிரிப்டோ ஜாப்ஸ்’ (https://allcryptojobs.io/ ) என்ற இணையதளம் உதவுகிறது. இந்தத் தளம் ‘கிரிப்டோ’ நாணயங்கள் தொடர்பான வேலைவாய்ப்புகளை பட்டியலிடுகிறது. இந்தத் துறை தொடர்பான வேலைவாய்ப்புகளைத் தேடிப்பார்க்கும் வசதியையும் அளிக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு விவரங்கள் அப்டேட் செய்யப்படுகின்றன. உங்கள் திறன்களுக்கு ஏற்ற வேலையைத் தேடலாம்.
