எந்தப் பணியையும் செய்யும் டெஸ்லா நிறுவனத்தின் மனித ரோபோ அறிமுகம்

எந்தப் பணியையும் செய்யும் டெஸ்லா நிறுவனத்தின் மனித ரோபோ அறிமுகம்
Updated on
1 min read

கலிபோர்னியா: டெஸ்லா நிறுவனத்தின் மனித ரோபோக்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ரோபோக் களால் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். இந்த மனித ரோபோக்கள் குறித்து டெஸ்லோ நிறுவன சிஇஓ எலான் மஸ்க் கூறியதாவது:

இந்த மனித ரோபோக்களால், நாம் விரும்பும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். இவற்றால் பேச முடியும், நடன மாட முடியும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியும். அவர்களுடன் விளையாட முடி யும். நாய்களை நடைபயிற்சி அழைத்து செல்ல முடியும், தோட்ட வேலைகளை செய்ய முடியும், வீட்டை சுத்தம் செய்ய முடியும், கடைக்கு சென்று பலசரக்கு சாமான்களை வாங்கி வர முடியும். மனிதர்களுக்கு சிறந்த நண்பனாக இருக்கும். இவற்றின் விலை 20,000 அமெரிக்க டாலர் முதல் 30,000 அமெரிக்க டாலர் வரை உள்ளது. இவ்வாறு எலன் மஸ்க் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in