விவோ T3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன்
விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ப்ரீமியம் செக்மென்ட் போனாக இதனை விவோ வெளியிட்டுள்ளது.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘T’ வரிசை போன்கள் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டி3, டி3எக்ஸ், டி3 லைட் மற்றும் டி3 புரோ மாடல் போன்கள் வெளியாகி இருந்தது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 9200+ ப்ராஸசர்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கம் உள்ள பிரதான கேமரா. 8 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வொய்ட் கேமராவும் உள்ளது
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 8ஜிபி / 12ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,000mAh பேட்டரி
  • 80 வாட்ஸ் அதிவேக சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
  • 5ஜி நெட்வொர்க்
  • இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ளது
  • வரும் 19-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது
  • இதன் விலை ரூ.31,999 முதல் ஆரம்பமாகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in