

புதிர் விளையாட்டு உங்களுக்குப் பிடிக்குமா? சிக்கலாகக் காட்சி அளிக்கும் புதிரில் சரியான வழியைக் கண்டுபிடிப்பது சவால்தான். இது போன்ற புதிர்களை நீங்களே உருவாக்கலாம். ‘மேஸே ஜெனரேட்டர்’ தளம் (http://www.mazegenerator.net/) இதற்கு வழி செய்கிறது. எந்த வகையான (சதுரமா, செவ்வகமா?) வடிவில் புதிர் தேவை என்பதில் தொடங்கி, நீளம் எவ்வளவு இருக்க வேண்டும், அகலம் எவ்வளவு இருக்க வேண்டும், உள்புற அளவு என்ன என்பது உள்ளிட்ட பல அம்சங்களைக் குறிப்பிட்டு இந்தப் புதிர்களை உருவாக்கலாம். புதிர் எந்த அளவு சிக்கலானதாக இருக்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கலாம்.