

இந்திய சந்தையில் தனி கவனம் செலுத்தி வரும் ஜியோமி நிறுவனம், எம்.ஐ. மியூசிக், எம்.ஐ. வீடியோ எனப் புதிய செயலிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எம்.ஐ. மியூசிக் இசை சேவைக்கான செயலி. இதில் 11 இந்திய மொழிகளில் லட்சக்கணக்கான பாடல்களைக் கேட்கலாம். பாடல்களை சேமிக்கும் வசதியும் உண்டு. பாடல் வரிகளை தெரிந்துகொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. பாடல் பின்னணியுடன் இணைந்து பாடும் கரோக்கி வசதியும் இருக்கிறது. எம்.ஐ. வீடியோ என்பது காணொலி சேவைக்கானது. உள்ளூர் நிறுவனங்களுடனான கூட்டு மூலம் இந்த சேவைகளுக்கான உள்ளடக்கத்தை ஜியோமி நிறுவனம் வழங்குகிறது.