வாட்ஸ்அப்பில் ஃபேவரைட்ஸ் அம்சம் அறிமுகம்: பயன் என்ன?

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மென்லோ பார்க்: வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது ஃபேவரைட் நபர்கள் மற்றும் குழுக்களுடன் எளிதில் தொடர்பில் இருக்கும் வகையில் ‘ஃபேவரைட்ஸ்’ அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் சாட் டேபில் ஃபில்டராகவும், அழைப்புகள் டேபில் மேல் பக்கமும் பயனர்கள் தங்களது ஃபேவரைட்களை அடையாளம் காணலாம்.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஃபேவரைட்ஸ் அம்சம் தற்போது வெளிவந்துள்ளது.

ஃபேவரைட்ஸ் அம்சம்: இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கிய குழுக்களை ஃபேவரைட்ஸ் பட்டியலில் சேர்க்கலாம். அப்படி சேர்க்கப்படும் கான்டக்ட் மற்றும் குழுக்கள் (குரூப்ஸ்) சாட்ஸ் மற்றும் கால்ஸ் (அழைப்புகள்) டேபில் டாப்பில் இருக்கும். அதன் ஊடாக எளிதில் அந்த கான்டக்ட் மற்றும் குழுக்களுடன் இணைப்பில் இருக்கலாம்.

தற்போது இந்த அம்சம் பயனர்களுக்கு படிப்படியாக அறிமுகமாகி வருகிறது. அடுத்த சில வாரங்களில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களின் பயன்பாட்டுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேவரைட்ஸ் அம்சத்தில் கான்டக்ட்/குழுக்களை சேர்ப்படி எப்படி? பயனர்கள் தங்களது சாட் ஸ்க்ரீனின் மேல்பக்கம் உள்ள ‘ஃபேவரைட்ஸ்’ ஃபிளடரை கிளிக் செய்து, அதில் தங்களது ஃபேவரைட் கான்டக்ட்/குழுக்களை சேர்க்கலாம். கால்ஸ் டேபில் ‘Add ஃபேவரைட்’ மூலமாக வேண்டிய கான்டக்ட்/குழுக்களை சேர்க்கலாம். அல்லது செட்டிங்ஸில் ஃபேவரைட்ஸ் ஆப்ஷன் மூலம் இதனை செய்யலாம். அதில் கான்டக்ட்/குழுக்களை வரிசைப்படுத்தவும் முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in