OnePlus Nord 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

ஒன்பிளஸ் நார்ட் 4 போன்
ஒன்பிளஸ் நார்ட் 4 போன்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் 4 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் நார்ட் 4 போன் அறிமுகமாகி உள்ளது.

இந்த போன் ‘நார்ட்’ சீரிஸில் வெளிவந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கான இயங்குதள அப்டேட், ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்ஸ் போன்ற உத்தரவாதம் ப்ரீமியம் செக்மென்ட் போனில் கிடைக்கிறது. ஏஐ க்ளியர் ஃபேஸ், ஏஐ எரேசர், ஏஐ சம்மரைஸ் மாதிரியான ஏஐ அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.74 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரேஷன் 3 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,500mAh பேட்டரி
  • 8ஜிபி/12ஜிபி ரேம்
  • 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்
  • 5ஜி நெட்வொர்க்
  • இந்த போனின் 100 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் வழங்கப்படுகிறது
  • வரும் 20-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது
  • இந்த போனின் தொடக்க விலை ரூ.29,999

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in