

மெசேஜிங் சேவை நிறுவனமான ‘ஸ்னாப்சாட்’ (ஸ்னாப்), ‘கூகுள் கிளாஸ்’ பாணியில் ‘ஸ்பெக்டகிள்ஸ்’ எனும் நவீன குளிர்கண்ணாடியைச் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. ஒளிப்படம், வீடியோ எடுக்கும் திறன் கொண்ட இந்தக் கண்ணாடி பெரிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது மேம்பட்ட கண்ணாடி வடிவத்தை ‘ஸ்பெக்டகில்ஸ் 2.0’ எனும் பெயரில் ஸ்னாப் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய வடிவத்தைவிடப் படமெடுக்கும் ஆற்றல் மேம்பட்டது இது. முதல் கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது.
மேலும் தகவல்களுக்கு: https://www.spectacles.com/