மோட்டோ Razr 50 அல்ட்ரா Flip போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

மோட்டோ Razr 50 அல்ட்ரா Flip போன்
மோட்டோ Razr 50 அல்ட்ரா Flip போன்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ Razr 50 அல்ட்ரா Flip போன் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா என இரண்டு ஃபிலிப் மாடல் போன்களை மோட்டோ அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் ரேசர் சீரிஸில் மோட்டோ Razr 50 அல்ட்ரா Flip போன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போனை சுமார் 6 லட்சம் முறை ஃபோல்ட் அல்லது அன்ஃபோல்ட் செய்யலாம் என மோட்டோ தெரிவித்துள்ளது. மோட்டோ ஏஐ மற்றும் Gemini ஏஐ அம்சங்களையும் இந்த போன் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 4 இன்ச் வெளிப்புற டிஸ்பிளே
  • 6.9 இன்ச் பிரைமரி டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 12ஜிபி ரேம்
  • 512ஜிபி ஸ்டோரேஜ்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
  • 4,000mAh பேட்டரி
  • 68 வாட்ஸ் சார்ஜர் போனுடன் வழங்கப்படுகிறது
  • யுஎஸ்பி டைப்-சி
  • வயர்லெஸ் சார்ஜிங் ஆப்ஷனும் உள்ளது
  • ரிவர்ஸ் சார்ஜிங்கும் இதில் செய்யலாம்
  • மூன்று முறை இயங்குதள அப்டேட் செய்யலாம்
  • ஒரு பிசிக்கல் சிம் மற்றும் ஒரு இ-சிம் பயன்படுத்தும் வசதி உள்ளது
  • இந்த போனின் விலை ரூ.99,999
  • இதனுடன் மோட்டோ பட்ஸ்+ வழங்கப்படுகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in