தளம் புதிது: பயண இணையதளம்

தளம் புதிது: பயண இணையதளம்
Updated on
1 min read

சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கான பயணத் திட்டமிடலைத் தாங்களே எளிதாக மேற்கொள்ள வழிகாட்டுகிறது ‘டிரிப்பினஸ்’ இணையதளம். இந்தத் தளத்தில் எந்த நகரிலிருந்து பயணத்தைத் தொடங்க இருக்கிறோம் என்பதைத் தெரிவித்து, பயணம் செய்ய இருக்கும் நகரையும் தெரிவித்தால் அதற்கான விமான வழிகள், தங்குமிடங்கள், சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள், ரெஸ்டாரண்ட்கள் என அனைத்தையும் இந்தத் தளம் காட்டுகிறது. அவற்றிலிருந்து விருப்பமானவற்றைத் தேர்வுசெய்து அதன் மூலமே பயண வழிகாட்டியை உருவாக்கிக்கொள்ளலாம். பயணிகள் தாங்கள் விரும்பும் பயண வகையைக் குறிப்பிட்டால் அதற்கேற்ற சுற்றுலா தலங்களையும் இது காட்டுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in