

'ஜைவ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய வயர்லெஸ் ஸ்பீக்கர்களை ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஒரு இடதுபுற மற்றும் வலதுபுற ஒயர்லெஸ் இணைப்புடன் வரும் சமீபத்திய 2.0 ஒயர்லெஸ் புக்ஷெல்ஃப் ஸ்பீக்கர் ‘ஜைவ்’. இரண்டு ஸ்பீக்கர்களும் பில்ட்-இன் பேட்டரியுடன் இருப்பதால் கம்பியிணைப்பு இல்லாமல் இசை மற்றும் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.
ஜைவ் 2.0 ஸ்பீக்கர் இடதுபுற மற்றும் வலதுபுற ஸ்பீக்கர்களுக்கு இடையில் ஒயர்லெஸ் இணைப்பைக் கொண்டிருக்கிறது. இது பயனருக்கு ஒரு 2.0 ஸ்பீக்கரில் உள்ளது போல பேர்ட் மோடிலோ (paired mode) அல்லது இரண்டு தனிப்பட்ட போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் போல ஒரு தனிப்பட்ட அமைப்பிலோ பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.
இது 5W+5W RMS அவுட்புட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஒரு AUX கேபிளுடனும் வருகின்றது, இதன் மூலம் கணிப்பொறி, தொலைக்காட்சி, கேமிங் கன்சோல் போன்றவற்றுடன் இணைக்கலாம்.
பின்புறம் ஒரு பிளே பட்டனுடன் வால்யூம் கண்ட்ரோல் பட்டன்களையும் கொண்டுள்ளது. ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டுள்ள மோடில் 2 வினாடிகளுக்கு ஸ்பீக்கர் மீதுள்ள பிளே பட்டனை அழுத்துவதன் மூலம் தனிப்பட்ட அமைப்பில் அல்லது இணைந்த (paired) அமைப்பில் இயக்க முடியும். பேர்ட் மோடில் (paired mode) நீங்கள் இரண்டு ஸ்பீக்கர்களுக்காகவும் ஸ்மார்ட்போன் போன்ற ஒரு சோர்ஸை பயன்படுத்தலாம்.
மேலும் ஸ்பீக்கர்களை ஒன்றிலிருந்து ஒன்று விலகியிருக்கும் வகையில் வைத்திருக்கலாம். அதேசமயம், தனிப்பட்ட மோடில் நீங்கள் ஸ்பீக்கர்களை தனிப்பட்ட ஒயர்லெஸ் ஸ்பீக்கராக பயன்படுத்தலாம். இது 8 மணி நேர பிளேபேக் நேரத்துடன் வருகின்றது,
கருப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த ஸ்பீக்கரின் விலை ரூ.4,499.