

காற்று சுத்திகரிப்பான்
காற்றிலுள்ள ஆவியாகும் மாசுக்களை இயற்கையான முறையில் அழிக்கும் காற்று சுத்திகரிப்பான். கருவியை மொபைலுடன் இணைப்பதன் வழியாக காற்றிலுள்ள மாசுக்களின் அளவை அறிந்துகொள்ளமுடியும். சான் பிரான்சிஸ்கோவின் கிளெய்ரி நிறுவனத் தயாரிப்பு.
இசை மோதிரம்
இசை அமைப்பதை எளிமைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மோதிரம். மோஷன் சென்சார் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தக் கருவி சாதாரண விரலசைவுகளை கேட்கத் தகுந்த இசையாக மாற்றித்தரும். நியோவா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கையடக்க மிக்ஸி
சிறிய பொருட்களை அவற்றின் தன்மைக்கு ஏற்ப அரைத்து அல்லது துருவித் தரும் கையடக்கக் கருவி. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. அரைத்த பொருட்களை சிறிய கண்ணாடி குடுவையில் சேகரிக்கும் இந்தக் கருவிக்கு ஒட்டோ என பெயரிடப்பட்டுள்ளது.