சாம்சங் கேலக்சி F55 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

கேலக்சி F55 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம்
கேலக்சி F55 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F55 5ஜி அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி ‘எஃப்’ வரிசையில் எஃப்55 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • ஸ்னாப்டிராகன் 7 ஜெனரேஷன் 1 ப்ராசஸர்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • டைப்-சி யுஎஸ்பி போர்ட்
  • 5,000mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • இந்த போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை
  • இந்த போனின் விலை ரூ.26,999 முதல் தொடங்குகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in