தளம் புதிது: முகவரிகளைப் பகிர புதிய வழி

தளம் புதிது: முகவரிகளைப் பகிர புதிய வழி

Published on

ஒரே இணைப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல இணைய முகவரிகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வசதியை ‘மெனிலிங்க்’ இணையதளம் அறிமுகம் செய்துள்ளது. சமூக ஊடகங்களிலும் இணைய சேவைகளிலும் பல்வேறு நோக்கங்களுக்காக இணைய இணைப்புகளைப் பகிர வேண்டிய தேவை ஏற்படலாம். ஓரிரு முகவரிகள் என்றால் எளிதாகப் பகிர்ந்துவிடலாம். ஆனால், ஒரே நேரத்தில் பல இணைய முகவரிகளைப் பகிர்வது சிக்கல்தான். இதை எளிதாகச் செய்துகொள்ள மெனிலிங்க் இணையதளம் உதவுகிறது. இதில் உறுப்பினராக இணைந்த பிறகு, இணைய முகவரிகளை உள்ளடக்கிய இணைப்பை உருவாக்கி பகிர்ந்துகொள்ளலாம்.

இணைய முகவரி: https://manylink.co/ 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in