ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தை சேர்ந்த மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் ஐடெல் மொபைல். பெரும்பாலும் பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் தற்போது ஐடெல் எஸ்24 மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது 'எஸ்' வரிசை மாடல்களில் ஒன்றாக வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலையில் தரமான கேமரா மற்றும் விரைவான செயல்பாடு கொண்ட ஸ்மார்ட்போனை சந்தையில் எதிர்பார்க்கும் பயனர்களை டார்கெட் செய்து இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஏஐ கேமரா, டிடிஎஸ் ஸ்பிக்கர் போன்றவற்றை இந்த போன் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.6 இன்ச் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ ஜி91 ஆக்டோ கோர் ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • 16ஜிபி ரேம்
  • 108 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள பிரதான கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • டைப்-சி யுஎஸ்பி
  • 5000mAh பேட்டரி
  • 18 வாட்ஸ் சார்ஜிங் திறன்
  • இந்த போனின் விலை ரூ.9,999

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in