வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை விவரத்தை இணையவெளியில் அறியலாம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை இணையதளம் மூலமாக வாக்காளர்கள் அறிந்து கொள்ள உதவும் அம்சம் குறித்து பார்ப்போம்.

முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் சுமார் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை அறிந்து கொள்ள உதவுகிறது https://erolls.tn.gov.in/queue/ என்ற இணையதள முகவரி.

இந்த தளத்தின் பக்கத்தில் வாக்காளர்கள் தங்களது மாவட்டத்தின் பெயர், தொகுதியின் பெயர் மற்றும் வாக்குச்சாவடியின் விவரத்தை உள்ளிட்டால் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை குறித்த விவரத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்த விவரங்கள் தேர்தல் ஆணையம் தரப்பில் வழங்கப்பட்டுள்ள பூத் ஸ்லிப்பில் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது வாக்களர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் இந்த தளத்தின் மூலம் மேற்கூறிய விவரத்தை வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in