Published : 17 Apr 2024 11:06 PM
Last Updated : 17 Apr 2024 11:06 PM

விவோ T3x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இப்போது இந்தியாவில் டி3x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘டி’ வரிசை போன்கள் விவோ பயனர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் டி3 மாடல் போன் வெளியாகி இருந்தது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.72 இன்ச் ஃபுள் ஹெச்டி+ டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 1 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள பிரதான கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேரமா
  • 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம் என மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • 128ஜிபி ஸ்டோரேஜ்
  • 6000mAh பேட்டரி
  • 44 வாட்ஸ் ஃப்ளேஷ் சார்ஜ் சப்போர்ட்
  • இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ளது
  • 5ஜி நெட்வொர்க்
  • கேமிங் பிரியர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் 4டி கேம் வைப்ரேஷன் மற்றும் கேம் வாய்ஸ் சேஞ்சர் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன
  • இந்த போனின் விலை ரூ.17,499. விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
  • வரும் 24-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை தொடங்குகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x