Published : 08 Apr 2024 07:03 PM
Last Updated : 08 Apr 2024 07:03 PM

75 லட்சம் ‘போட்’ பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்தவிட்டதாக தகவல்

சென்னை: இந்தியாவில் பிரபலமானதாக அறியப்படும் ஆடியோ சாதனம் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் அக்சசரிஸ் தயாரிப்பு நிறுவனமான போட் லைஃப்-ஸ்டைல் கேட்ஜெட்ஸ் நிறுவன சாதனங்களை பயன்படுத்தும் சுமார் 75 லட்சம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஃபோர்ப்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

போட் பயனர்களின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு லேபிள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட் பயனர்களின் பெயர், முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயனர் ஐடி உள்ளிட்ட தரவுகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த தரவுகளை கொண்டு இணையவழியில் குற்ற செயல்களை மேற்கொள்பவர்கள் தங்களது கைவரிசையை வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ShopifyGUY எனும் ஹேக்கர் இந்த தரவுகளை டார்க் வெப்பில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் இதற்கு முன்பு ஆதார் பயனர்கள் உட்பட பல்வேறு தரவுகள் டார்க் வெப் தளத்தில் கசிந்துள்ளன.

பெரும்பாலும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களை பயன்படுத்தும் பயனர்கள் பெயர் உள்ளிட்ட சில விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மொபைல் செயலியில் உள்ளிட்டு, தங்களது போனுடன் ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை இணைத்து கொள்வார்கள். அதன் மூலம் மெசேஜ், தொலைபேசி அழைப்பு உட்பட பலவற்றின் நோட்டிபிகேஷனை பெறுவர். அந்த வகையில் முக்கியத் தகவல்களின் அக்சஸ் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பெறலாம்.

பயனர்களின் தரவுகள் கசிந்துள்ள விவரம் குறித்து போட் நிறுவனம் தரப்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உலக நாடுகளில் இது போல பயனர்களின் தரவுகள் கசிந்தால் அது குறித்து பயனர்களுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x