ஆண்ட்ராய்டு 15 இயங்குதள அம்சங்கள்: கூகுள் வெளியிட்ட ப்ரிவியூ

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

கலிபோர்னியா: ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயனர் அம்சத்தை வழங்கும் வகையில் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை வெளியிட உள்ளது கூகுள். இந்நிலையில், அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் ப்ரிவியூ செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் முதல் வெர்ஷன் வெளியானது. அது முதலே உலகை ஆட்சி செய்து வருகிறது. அவ்வப்போது சீரான இடைவெளியில் அடுத்தடுத்த ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை தொழில்நுட்பத்தின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் வெர்ஷன் அறிமுகமாக உள்ளது. இதன் முன்னோட்டமாக டெவலப்பர்களுக்கென பிரத்யேகமாக சில அம்சங்களை வெளியிட்டுள்ளது. அது சோதனை அடிப்படையில் இருந்தாலும் அது குறித்த விவரங்களை பார்ப்போம்.

  • வால்யூம் ஸ்லைடர்ஸில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்போது பில்-ஷேப்பில் இது மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மீடியா, அழைப்பு (கால்), ரிங், நோட்டிபிகேஷன் மற்றும் அலாரம் சார்ந்து வால்யூம் மாற்றங்களை துல்லியமாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சாட்டிலைட் கனெக்டிவிட்டி மூலம் ரிமோட் பகுதிகளிலும் சாட்டிலைட் இணைப்பு மூலம் தொடர்பு கொள்ள முடியும். இந்த அம்சத்தை ஐபோன் பயனர்கள் ஏற்கெனவே பயன்படுத்தி வருகின்றனர்.
  • சென்சிட்டிவ் நோட்டிபிகேஷன் மற்றும் நோட்டிபிகேஷன் கூல் டவுன் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது பயனர்களுக்கு தனித்துவ அனுபவத்தை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கூடவே பயனரின் பிரைவசி சார்ந்த விஷயத்திலும் இது கவனம் செலுத்துகிறது.
  • பார்ஷியல் ஸ்க்ரீன் ஷேரிங்
  • ப்ளூடூத் இணைப்பினை ஸ்ட்ரீம்லைன் செய்து பார்க்கும் அம்சம்
  • ஹை-குவாலிட்டி வெப்கேம் மோட்
  • அடுத்ததாக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பீட்டா வெர்ஷன் வெளியாக உள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in