

சுற்றிச் சுழன்று படம் எடுத்து சுற்றுப்புறத் தோற்றத்தை முழுமையாகக் காட்டும் 360 டிகிரி கேமராதான் இப்போது பிரபலம். இந்த வகை கேமராக்களைத் தயாரிக்கும் ‘இன்ஸ்டா 360’, நானோ எஸ் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. தனி சாதனமாகவும் ஐபோனுடன் இணைந்தும் செயல்படக்கூடிய இந்த கேமரா 360 கோணத்தில் படத்தை எடுக்கும். இவற்றை ஃபேஸ்புக், ட்விட்டரிலும் பகிரலாம். சுற்றுப்புறத் தோற்றத்திலிருந்து தேவையான காட்சியை மட்டும் தேர்வு செய்தும் பகிரலாம். 360 கோண படப்பிடிப்பு சுழலில் வீடியோ வழி உரையாடும் வசதியும் இருக்கிறது. தகவல்களுக்கு:https://www.insta360.com