ஹெல்மெட்டில் புளூடூத்.. இனி தெரியாத வழியை எளிதாக கண்டறியலாம்

ஹெல்மெட்டில் புளூடூத்.. இனி தெரியாத வழியை எளிதாக கண்டறியலாம்
Updated on
1 min read

கர்நாடகாவின் காலாபுர்கி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் புளூடூத் வசதி கொண்ட ஹெல்மெட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஹெல்மெட், நாம் முன்பின் அறியாத இடத்துக்கு செல்லும்போது நமக்கு வழிகாட்டியாக செயல்படும்.

எப்படி எனக் கேட்கிறீர்களா? இது குறித்து இவ்வகை ஹெல்மெட்டை வடிவமைத்துள்ள பிடிஏ கல்லரியைச் சேர்ந்த மாணவர்கள் யோகேஷ், அபிஜீத் கூறும்போது, "தெரியாத இடத்துக்கு செல்லும்போது வழிதேடி அலையும் சூழலை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளோம். இந்த ஹெல்மெட்டுக்குள் புளூடூத் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. சார்ஜ் செய்துகொள்வதற்கு ஏதுவாக ஒரு போர்ட்டும் உள்ளது. 6 மணி நேரம் சார்ஜ் நிற்கும். பயனாளர் தனது மொபைல் ஃபோனை இந்த புளூடுத்துடன் இணைக்க வேண்டும். கூகுள் மேப்ஸ் உதவியுடன் புளூடூத் வழியாக செல்ல வேண்டிய திசைகளைத் தெரிந்து கொள்ள முடியும்" எனத் தெரிவித்தனர்.

இந்த ஹெல்மெட்டின் விலை ரூ.1500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in