

சான் ஜோஸ்: சாம்சங் கேலக்சி ஏ24 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் 17-ம் (புதன்கிழமை) தேதி நடைபெற்ற நிகழ்வில் இது அறிமுகமானது. கேலக்சி எஸ்24, கேலக்சி எஸ்24 பிளஸ் மற்றும் கேலக்சி எஸ்24 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இந்த வரிசையில் அறிமுகமாகி உள்ளது. இன்-பில்ட் ஏஐ டூல் உடன் இந்த போன் வெளிவந்துள்ள முதல் ஸ்மார்ட்போன் இது. (இது குறித்து கடந்த நவம்பரில் இந்து தமிழ் திசையில் பதிவு செய்திருந்தோம்)
தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி எஸ்24 வரிசை போன்கள் அறிமுகமாகி உள்ளன.