

வயர்லெஸ் ஆடியோ, ஸ்பீக்கர், எல்ஈடி டார்ச் உள்ளிட்ட 6 அம்சங்கள் கொண்ட ஸ்பீக்கரை ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜீப்ரானிக்ஸ் எஸ்டீம் என்ற இந்த ஸ்பீக்கரில் மேலும் எஃப்.எம் ரேடியோ கேட்கலாம். இதில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மூலம் பிடித்த பாடல்களைக் கேட்கலாம். இதை பயனர்களின் மொபைலுக்கு சார்ஜ் ஏற்றவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதில் ஸ்பீக்கர் ப்ளூடூத் வழியாக வயர்லெஸ்ஸாக வேலை செய்கிறது. இதில் சிறிய மைக் இருப்பதால் அதைக் கொண்டு மொபைல் அழைப்புகளையும் இதிலேயே பேசலாம். இதன் பவர் பேங்க் 2000mah திறன் கொண்டது. இதன் வடிவம் கைக்கு அடக்கமாக இருப்பதால் இதை எங்கும் எடுத்துச் செல்லலாம். பயனர்கள் சைக்கிளில் பொருத்திக் கொள்ளுமாறு சிறிய இணைப்பும் இதனுடன் வழங்கப்படுகிறது. இந்த எஸ்டீமில் மொத்தம் மூன்று பட்டன்கள் மட்டுமே உள்ளன.
இந்த சாதனம் குறித்து பேசிய ஜீப்ரானிக்ஸின் இயக்குநர் பிரதீப் தோஷி, "பல செயல்பாடுகள் கொண்ட தயாரிப்புகளில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் எப்போதும் முன்னிலை வகிக்கிறது. வயர்லெஸ் சந்தையில் எங்கள் இருப்பை இன்னும் உறுதியாக்க இந்த 6 அம்சங்கள் கொண்ட ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளோம்" என்றார்.
ஜீப்ரானிக்ஸ் எஸ்டீமின் விலை ரூ. 1,449/-