தகவல் புதிது: மென்பொருளின் மறுவடிவம்

தகவல் புதிது: மென்பொருளின் மறுவடிவம்
Updated on
1 min read

எம்.எஸ்.பெயிண்ட் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சரி, ஜே.எஸ்.பெயிண்ட் தெரியுமா? எம்.எஸ். பெயிண்டின் மறுவடிவம்தான் இந்த புதிய மென்பொருள். எம்.எஸ். பெயிண்ட் அபிமானிகளுக்கு நிச்சயம், இந்தப் புதிய மென்பொருள் மகிழ்ச்சியை அளிக்கும். எம்.எஸ். பெயிண்ட் மென்பொருளில் பார்க்கக்கூடிய பழைய எளிமையையும் பயன்பாட்டுத்தன்மையையும் புதிய மென்பொருளிலும் பார்க்கலாம்.

விண்டோசின் அடுத்த வடிவில் இந்த மென்பொருள் இருக்காது என்றும் இதற்குப் பதிலாக முப்பரிமாண வடிவ மென்பொருள் இருக்கும் என்றும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இந்தச் செய்தி எம்.எஸ். பெயிண்ட் அபிமானிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஆனால், இந்த மென்பொருளைத் தனிச் செயலியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்தது. இந்நிலையில் தற்போது இந்த மென்பொருளின் அனைத்து அம்சங்களையும் கொண்ட அதன் மறுவடிவமான ஜே.எஸ். பெயிண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in