Zoom தளத்தில் டாக்குமென்ட் அம்சம்: சேவையை விரிவு செய்யும் நிறுவனம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கலிபோர்னியா: ஸூம் வீடியோ கம்யூனிகேஷன் தளத்தில் டாக்குமென்ட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். அண்மையில் நடைபெற்ற அந்நிறுவனத்தின் Zoomtopia 2023 ஆண்டு விழா நிகழ்வில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2011-ல் நிறுவப்பட்டது ஸூம் வீடியோ கம்யூனிகேஷன் நிறுவனம். பரவலாக ஸூம் என அறியப்படுகிறது. மீட்டிங், சாட், குரல் வழி அழைப்பு மேற்கொள்ள இந்த தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸில் இதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. கரோனா பரவலின்போது உலக அளவில் ஸூம் தளம் பயன்படுத்தப்பட்டது. அலுவலகம், பள்ளி, கல்லூரி என பெரும்பாலான இடங்களில் ஸூம் சேவை அவசியமானதாக அமைந்தது. பயனர்கள் இதனை பயன்படுத்துவதும் எளிது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில் Zoomtopia 2023 நிகழ்வில் தங்கள் தளத்தின் சேவைகளை விரிவு செய்யும் வகையில் Zoom Docs அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸூமின் ஏஐ கம்பேனியனை ஒருங்கிணைக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இது கூகுள் வொர்க் ஸ்பேஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் 365-க்கு மாற்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது. வரும் 2024-ல் அதிக எண்ணிக்கையிலான பயனர்களின் பயன்பாட்டுக்கு Zoom Docs கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸூமின் டீம் சாட், பிரவுசர் மற்றும் மொபைல் செயலி மூலமாக Zoom Docs சேவையை பயனர்கள் பயன்படுத்த முடியும் என தெரிகிறது. ஸூமின் ஏஐ கம்பேனியனை கொண்டு டாக்குமென்ட்டில் உள்ள கன்டென்ட் சார்ந்த தகவலை பயனர்கள் பெறவும் முடியுமாம். மேலும் Zoom Docs-ல் டாக்குமென்ட்களை இன்டர் லிங்க் செய்வது, எம்பாட் செய்யவும் முடியும் என சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக ஸூம் மீட்டிங்கின் போது இதை நேரடியாக பயன்படுத்தலாம் எனவும் தகவல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in