Published : 03 Oct 2023 10:39 PM
Last Updated : 03 Oct 2023 10:39 PM

BUYING GUIDE | இந்திய சந்தையில் ரூ.15,000-க்கு குறைந்த விலையில் கிட்டும் 5ஜி ஸமார்ட்போன்கள்

கோப்புப்படம்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.15,000 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகி ஓராண்டு காலம் ஆகிறது. இந்த சூழலில் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை எதிர்பார்க்கும் மொபைல்போன் பயனர்களுக்கு இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும் சில நிறுவனங்களின் போன்கள் குறித்துப் பார்ப்போம்.

இந்த ஸ்மார்ட்டான டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும். செல்போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பர் கூட பின்னாளில் அதன் பரிணாம வளர்ச்சியானது இப்படி எல்லாம் இருக்கும் என கணித்திருக்கமாட்டார். அந்த அளவுக்கு மாறியுள்ளது செல்போன்.

‘ஹலோ’ சொல்வதில் தொடங்கி குறுஞ்செய்தி அனுப்ப, வீடியோ வடிவிலான உரையாடல் மேற்கொள்ள, பணம் அனுப்ப மற்றும் பெற, ஆன்லைன் டிக்கெட் புக் செய்ய, படம் பார்க்க, புத்தகம் வாசிக்க என மாயமானை போல ஸ்மார்ட்போன்களின் ஓட்டம் நீண்டு கொண்டே போகிறது. இந்தச் சூழலில் 5ஜி போன் வாங்க விரும்புபவர்களுக்கான வழிகாட்டுதல்.

லாவா பிளேஸ் புரோ 5ஜி: இந்திய சந்தையில் லாவா பிளேஸ் புரோ 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகமாகி இருந்தது. 6.78 இன்ச் ஃபுள் ஹெச்டி+ டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், மீடியாடெக் டிமன்சிட்டி 6020 சிப்செட், 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 5,000mAh பேட்டரி, டைப் சி சார்ஜிங் போர்ட், 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா கொண்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.12,499.

சாம்சங் கேலக்சி எம்14 5ஜி: கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் சாம்சங் கேலக்சி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது. 6.6 இன்ச் பிஎல்எஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்டி+ ரெசல்யூஷன், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், சாம்சங்கின் Exynos 1330 ப்ராசஸர், 50+2+2 மெகாபிக்சல் என பின்பக்கத்தில் மூன்று கேமரா, 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா, 6,000mAh பேட்டரி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் விற்பனை ஆகிறது. ரூ.11,990 முதல் இந்த போன் கிடைக்கிறது.

ரெட்மி 12 5ஜி: கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமானது ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன். 6.79 இன்ச் திரை அளவு கொண்ட டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 சிப்செட். 4 ஜிபி ரேம் + 128 ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது. 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா. 5,000mAh பேட்டரி, டைப் சி யுஎஸ்பி போர்ட் கொண்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.11,999 முதல் தொடங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x