

எல்லா இடங்களிலும் உட்கார்வதற்கான வசதிகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால் சிட்பேக் என்கிற இந்த கருவி அதை சாத்தியமாக்கும். பாலிகார்பனேட் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதால் உறுதியாக நிற்கும். எடுத்துச் செல்வதும் எளிது.
ஹெட்போன் 2.0
விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற ஹெட்போன் வின்சி 2.0. கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். போன் பேசுவது, இசை கேட்பது உள்பட உடற்பயிற்சி விவரங்களையும் சேமிக்கும். குரல் மூலமான கட்டளைகளையும் செயல்படுத்தும்.
எலெக்ட்ரிக் பிரஷ்
பல் துலக்குவதற்கான எலெக்ட்ரிக் பிரஷ் ஏற்றிக் கொள்ளும் வசதி கொண்டது. பிரஷ்ஷின் முனைப்பகுதி மட்டுமே இயங்கும். வழக்கமான பிரஷ்ஷைப் போலவே கையாளலாம். பிளாஸ்டிக் பிரஷ்களுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
நடக்கும் ரோபோ
ரஷியாவை சேர்ந்த ரோபோ வடிவமைப்பு நிறுவனம் பல கால்களுடன் நடக்கும் ரோபோவை வடிவமைத்துள்ளது. இந்த ரோபோவை மேம்படுத்துவதன் மூலம் அலுவலகம் மற்றும் வீட்டு உபயோக சாதனமாக இதைப் பயன்படுத்தலாம். சிறிய சாலைகள் மற்றும் ஷாப்பிங் செல்கையில் கட்டளைக்கு ஏற்ப மனிதர்களின் பின்னாலேயே நடந்து வரும். குரல் கட்டளைக்கு ஏற்ப நான்கு திசைகளிலும் நடக்கிறது. மனிதர்களைப் போலவே மாடிப்படிகளில் ஏறி இறங்கும். ரஷ்யாவில் நடந்த சர்வதேச மாணவர் திருவிழாவில் இதைக் காட்சிபடுத்தியுள்ளனர்.
இயந்திர கை
ஒரு கை செய்யும் வேலையை இரண்டு இயந்திர கைகள் மூலம் செய்ய வைக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் இத்தாலி விஞ்ஞானிகள். இயந்திர கை என்ன செய்ய வேண்டும் என்கிற கட்டளையை மூளை நமது கைகளுக்கு அளிக்கும். நமது கைகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப இயந்திர கை செயல்படும். அதாவது மனித மூளையின் கட்டளையை செயல்படுத்தும் இயந்திர கை என்கிற அடிப்படையில் உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் ஒரு கையை கொண்டு பல இயந்திர கைகளுடன் வேலை பார்க்கலாம்.