ஃபிளாஷ்பேக் 2017: நடுங்கவைத்த வைரஸ்

ஃபிளாஷ்பேக் 2017: நடுங்கவைத்த வைரஸ்
Updated on
1 min read

ணைய உலகுக்கு வைரஸ் வில்லங்கம் புதிதல்ல. ஆனால், இந்த ஆண்டு மே மாதம் இணைய உலகை உலுக்கிய வான்னகிரை வைரஸ் இணையவாசிகள் மத்தியில் பீதியாகப் பார்க்கப்பட்டது. இணையவாசிகளின் கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை டிஜிட்டல் பூட்டு போட்டு, அணுக முடியாமல் செய்து, அதை விடுவிக்கப் பிணைத்தொகையாகப் பணம் கேட்டு மிரட்டும் வைரஸ் ரகங்கள் ரான்சம்வேர் எனக் குறிப்பிடப்படுகின்றன.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள ஓர் ஓட்டையைப் பயன்படுத்திக்கொண்டு இப்படி கம்ப்யூட்டர்களைப் பூட்டு போட்டு, ஹேக்கர்கள் மிரட்ட வான்னகிரை வைரஸ் வழி செய்தது. இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். இந்த வைரசை உருவாக்கிய ஹேக்கர்கள், பிணைத்தொகையாக பிட்காயின் கேட்டது, விர்ச்சுவல் நாணயத்தையும் பிரபலமாக்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in