எக்ஸ் தளத்தில் வீடியோ, ஆடியோ அழைப்பு வசதி: எலான் மஸ்க் அறிவிப்பு

எலான் மஸ்க்
எலான் மஸ்க்
Updated on
1 min read

சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ் எனும் ட்விட்டர் தளத்தில் கூடிய விரைவில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது. ட்விட்டருக்கு போட்டியாளர்கள் ஏராளமாக உருவானாலும் அதை கண்டும் காணாமல் மஸ்க் இயங்கி வருகிறார். ட்விட்டர் தளத்தின் பெயரை எக்ஸ் என மாற்றி உள்ளார்.

இதன் மூலம் வெறும் ட்வீட் சேவை மட்டுமல்லாது பேபால் (நிதி சேவை) மற்றும் மெஸஞ்சர் போன்ற இன்னும் பிற விஷயங்களையும் ஒரே செயலியில் கொண்டு வருவதுதான் மஸ்கின் திட்டம் என சொல்லப்பட்டது. இது சூப்பர்-ஆப் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், அதை மெய்ப்பிக்கும் விதமாக தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எக்ஸ் தளத்தில் விரைவில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் வர உள்ளனர். ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் பிசி என அனைத்திலும் இது இயங்கும். இதற்கு தொலைபேசி எண் தேவையில்லை. இது தனித்துவமாக இருக்கும் என மஸ்க் ட்வீட் செய்துள்ளார். இருந்தாலும் இது எக்ஸ் தளத்தில் சந்தா செலுத்தி வரும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in