தொழில்நுட்பம்
ஃபிளாஷ்பேக் 2017: ஆட வைத்த பாட்டு
இ
ந்த ஆண்டு அதிகம் வைரலான வீடியோக்களின் பட்டியலை யூடியூப் வெளியிட்டுள்ளது. உலக அளவில், இந்திய அளவில் எனத் தனித்தனியே பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவிலான பட்டியலில், ஜிமிக்கி கம்மல் பாட்டு வீடியோ முன்னணியில் இடம்பெற்றுள்ளது. ஹிட் பாடலான ஜிமிக்கி கம்மலுக்கு இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் மாணவ, மாணவிகள் அழகாக நடனமாடிய அந்த வீடியோ, டிரெண்டாகி உலகம் முழுவதும் பேசப்பட்டது. இப்போது 2017-ம் ஆண்டின் டாப் டென் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.
