

செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 32 அங்குல எல்இடி டிவி தயாரித்துள்ளது. இந்த டி.வி.க்களை ஸ்நாப்டீல்.காம் இணையதளம் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இப்போது முதல் முறையாக ஸ்நாப்டீல்.காம் நிறுவனத்துடன் மைக்ரோமேக்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டி.வி.யின் விலை ரூ. 16,490 ஆகும். இந்த எல்இடி டி.வியில் ஜீரோ டாட் பேனல், நேரோ பேஸல் வடிவமைப்பு, யுஎஸ்பி வசதி ஆகியன உள்ளன. அனைத்து ஆடியோ, வீடியோ செயல்பாட்டு தளம் கொண்டது. ஹெச்டிஎம்ஐ மற்றும் விஜிஏ போர்ட் வசதியும் இதில் உள்ளது.
2012-ம் ஆண்டு இந்நிறுவனம் எல்இடி தயாரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.