தளம் புதிது: வீடியோவைத் திருத்தலாம்

தளம் புதிது: வீடியோவைத் திருத்தலாம்
Updated on
1 min read

வீடியோ என்றால் யூடியூப் மட்டுமே என்று இருந்தது ஒரு காலம். இப்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் எனப் பல்வேறு சமூக ஊடக சேவைகளில் வீடியோக்களைப் பகிர முடிகிறது. எந்தத் தளத்தில் வேண்டுமானாலும் வீடியோக்களைப் பகிரலாம் என்றாலும், பகிரும் வீடியோ குறிப்பிட்ட சேவைக்கு ஏற்ப இருப்பது நல்லது. இந்தக் குறையைப் போக்கும் வகையில் காப்விங் இணையதளம் வீடியோக்களைக் குறிப்பிட்ட சேவைகளுக்கு ஏற்ப மாற்றித் தருகிறது. இந்தத் தளத்தில் மாற்ற விரும்பும் வீடியோவைப் பதிவேற்றிவிட்டு, அதை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்குக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். மூல வீடியோவின் தரத்தில் பாதிப்பில்லாமல் மாற்றித் தருகிறது இந்தத் தளம்.

இணைய முகவரி: goo.gl/6W1rxE

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in