

டெஸ்லா நிறுவனம் பேட்டரி மற்றும் டீசலில் இயங்கக் கூடிய டிரக்கை உருவாக்கியுள்ளது. ஒருமுறை சார்ஜிங் செய்தால் 500 கிமீ பயணிக்கும். இந்த டிரக்கில் டிரைவர் இருக்கை பக்கவாட்டில் இல்லாமல் நடுவில் இருக்கும்.
டெஸ்லா டிரக்
மோட்டோரோலா நிறுவனம் இன்ஸ்டா ஷேர் பிரிண்டர் என்கிற பிரிண்ட் எடுக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. இந்த போனில் புரஜொக்டர், வெளிப்புற ஸ்பீக்கர் வசதியும் உள்ளது.
அட்லஸ் ரோபோ
போஸ்டன் ரோபோடிக்ஸ் நிறுவனம் மனிதர்களைப் போல தாவிக் குதிக்கும், ஓடி திரும்பும் ரோபோவை தயாரித்துள்ளது. அட்லஸ் என்று பெயரிட்டுள்ளனர். தாவிக் குதிக்கையில் தானாக நிலைநிறுத்திக் கொள்ளும்.
கார்பன் டாட்டூ
உடலில் டாட்டூ வரைந்து கொள்வதற்கு பலருக்கும் ஆர்வம் இருக்கும். அதையே உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் கருவியாக மாற்றுகிறது கார்பன் டாட்டூ முறை. ஒட்டும் வகையிலான இந்த டாட்டூவில் இருந்து உடல் நிலை குறித்த தகவல்களை ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டரில் தெரிந்து கொள்ளலாம். வழக்கமான டாட்டூவை விட பல மடங்கு மெலிதானது. மருத்துவ துறைக்கு பயன்படும் என்று இதை மேம்படுத்தி வரும் டெக்சாஸ் பல்கலைக் கழகம் கூறியுள்ளது.
சமையல் குடுவை
சூரிய மின்சக்தி மூலம் அனைத்து இடங்களிலும் மின் தேவைகள் பூர்த்தியாகி உள்ளன. அதுபோலவே சமையல் வேலைகளுக்கான வெப்ப அடுப்புகளும் வந்துள்ளன. அந்த வகையில் கோ சன் கோ என்கிற சோலார் குடுவை சமையல் மற்றும் சுடு நீர் தேவைகளுக்கு என்று உருவாக்கப்பட்டுள்ளது. சிப்பி போன்ற அமைப்பில் இது உள்ளது. குடுவையில் தண்ணீர் அல்லது சமைக்க வேண்டியவற்றை வைத்து சூரிய ஒளியில் வைத்தால் போதும் சில நிமிடங்களில் உணவு தயாராகிவிடும்.