

செயலி உலகில் ஷாஸம் செயலி மிகவும் பிரபலம். இசை கண்டறிதல் செயலி என வர்ணிக்கப்படும் இது, இசை மெட்டுகள் அல்லது ஒலி குறிப்புகளைக் கேட்டு, அதற்குரிய பாடல் எது என்பது உள்ளிட்ட விவரங்களை அளிக்கவல்லது. இதேபோலவே, கலைப் படைப்புகளை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து அவை தொடர்பான விவரங்களை அளிக்கும் வகையில் ஸ்மார்ட்டிபை செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
உலகின் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களுக்குச் செல்லும்போது, அங்குள்ள கலைப் படைப்புகள் தொடர்பான தகவல்கள் தேவையெனில், இந்தச் செயலியால் அந்தப் படைப்புகளை ஸ்கேன் செய்தால் போதும், அவை தொடர்பான தகவல்கள் திரையில் தோன்றும். உலகின் முன்னணி அருங்காட்சியகங்கள் பலவற்றில் இந்தச் செயலி செயல்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கானது.
மேலும் தகவல்களுக்கு: https://smartify.org/