

கணினி வசதி உள்ளவர்கள் மற்றும் கணினி வசதி இல்லாதவர்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க "கணினிமய இந்தியா" திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது.
இத்திட்டம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் அனைத்து கிராமங்களும் பிராட்பாண்ட் சேவை பெற்று இணைய வசதியுடன் இருப்பதை இத்திட்டம் உறுதிசெய்யும்.
அரசின் சேவைகளை மக்களிடம் எளிதில் சேர்ப்பதோடு, இது அரசு செயல்படுகளின் வெளிப்படை தன்மையும் உறுதி செய்யும்.
இத்திட்டம் நாட்டில் கணினியின் மென் பொருள் மற்றும் வன்பொருள் உற்பத்தியை மேற்கொள்ள வழிவகுக்கும் என்றும், இதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் மக்களவையில் இன்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
இத்துடன், தேசிய கிராமப்புற இணையம் மற்றும் தொழில்நுட்ப இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இது கிராமப்புரங்களில் உள்ள பள்ளிகளில் பயில்பவர்களின் திறனை அதிகரிக்கும். மேலும், அரசு சேவைகளை கொண்டு சேர்க்கவும், அரசாட்சி திட்டத்தை அமலாக்கவும் "ஈ-கிராந்தி" எனும் "இணைய புரட்சி" அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதற்காக ஆரம்ப நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்லாட்சியை ஊக்குவிக்க தனி திட்டமும் அதற்காக ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.