சாட்ஜிபிடி ஆண்ட்ராய்டு செயலி: இந்தியாவில் அறிமுகம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி-யின் ஆண்ட்ராய்டு செயலி அறிமுகமாகி உள்ளது. இந்தியாவில் உள்ள பயனர்களும் இதனை பயன்படுத்தலாம். அது குறித்து பார்ப்போம்.

கடந்த ஆண்டு உலக மக்கள் மத்தியில் அதி தீவிரமாக பேசப்பட்டது சாட்ஜிபிடி. செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இந்த சாட்பாட் உடன் பயனர்கள் உரையாட முடியும். பயனர்கள் கேட்கின்ற கேள்விகள் அனைத்துக்கும் பதில் கொடுக்கும் வல்லமை கொண்டது சாட்ஜிபிடி. கதை, கட்டுரை, கவிதை, கம்யூட்டர் புரோகிராம் என அனைத்தும் இதில் பெறலாம்.

ஓபன் ஏஐ எனும் நிறுவனம் சாட்ஜிபிடி-யை வடிவமைத்தது. இந்த சூழலில் இதன் பயனர் வட்டத்தை விரிவு செய்யும் வகையில் வெப் பிரவுசர்கள் மட்டுமல்லாது மொபைல் போன் செயலி வடிவிலும் அறிமுகம் செய்யும் திட்டத்தை ஓபன் ஏஐ கையில் எடுத்தது. அந்த வகையில் கடந்த மே மாதம் ஆப்பிள் போன் பயனர்கள் பயன்படுத்தும் வகையில் ஐஓஎஸ் தளத்திற்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு வடிவிலும் வெளிவந்துள்ளது.

முதற்கட்டமாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் வங்கதேசத்தில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் இதை தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். இந்த நாடுகளில் உள்ள பயனர்கள் பிளே ஸ்டோரில் இருந்து சாட்ஜிபிடி செயலியை தங்கள் போனில் இன்ஸ்டால் செய்யலாம் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.

எளிமையான பயனர் அனுபவத்தை பயனர்கள் இதில் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் அண்மைய மேம்பாடுகள் சிலவற்றையும் பயனர்கள் இதில் பெற முடியுமாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in