என்ன பாடல் என்று கண்டுபிடிக்கும் கூகுள் அசிஸ்டன்ட்: புதிய அப்டேட்

என்ன பாடல் என்று கண்டுபிடிக்கும் கூகுள் அசிஸ்டன்ட்: புதிய அப்டேட்
Updated on
1 min read

ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன்களில் கூகுள் அசிஸ்டன்ட் பயன்படுத்துபவர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள். இதன் மூலம், நம்மைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் பாடல் பற்றிய விவரங்களை கூகுள் அசிஸ்டன்ட் நமக்குத் தரும்.

கூகுள் அசிஸ்டன்டை இயக்கி, இது என்ன பாடல்? (What song is this?) அல்லது என்ன பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது? (what song is playing?)  என ஆங்கிலத்தில் கேட்டால் அது பற்றிய விவரங்களை கூகுள் அசிஸ்டன்ட் தேடித் தரும்.

மேலும் அது தரும் தகவல்களில், அந்த பாடலுக்கான யூடியூப் இணைப்பு, கூகுள் ப்ளே மியூஸிக் இணைப்பு, ஸ்பாடிஃபை ஸ்ட்ரீமிங் இணைப்பு, கூகுள் தேடியந்திர இணைப்பு என அனைத்தும் பயனர்களுக்கு தரப்படும்.

முன்னதாக கூகுளின் பிக்ஸல் 2 மற்றும் மிக்ஸல் 2 எக்ஸ்.எல் மொபைல்களில் மட்டும் இந்த வசதி இருந்தது. தற்போது கூகுள் அசிஸ்டன்ட் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in