

போட்டோஷாப், கிராபிக்ஸ் போன்ற எந்த நுணுக்கத்தையும் அறியாமல், அழகான வடிவமைப்புகளை உருவாக்கிக்கொள்ள வழிசெய்கிறது கிரெல்லோ இணையதளம்.
இந்தத் தளத்தில் உள்ள மாதிரி வடிவமைப்புகளைத் (டெம்பிளேட்) தேர்வுசெய்து அதில் பின்னணியை மாற்றுவது, வாசகங்களைச் சேர்ப்பதன் மூலம் பயனாளிகள் தங்களுக்கான புதிய வடிவமைப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம். ஃபேஸ்புக் பதிவுகளுக்கான வடிவமைப்பு, இன்ஸ்டாகிராம் பகிர்வுக்கான வடிவமைப்பு போன்றவற்றை இந்தத் தளம் மூலம் எளிதாக உருவாக்கலாம். அனிமேஷன் சித்திரங்களையும் உருவாக்கிக்கொள்ளும் வசதி இருக்கிறது. நூற்றுக்கணக்கான டெம்பிளேட்கள் உள்ளன. அவற்றில் இருந்து விரும்பியதைத் தேர்வு செய்து தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். கட்டணச் சேவையில் கூடுதல் வசதிகள் உண்டு.
இணைய முகவரி: https://crello.com/home/