

பொய்ச் செய்தி எனப்படும் ‘ஃபேக் நியூஸ்’ சவாலைச் சமாளிக்க ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் பாடுபடுகின்றன. இந்தப் பிரச்சினை இணையத்தின் நம்பகத்தன்மைக்கான சவாலாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் காலின்ஸ் அகராதி, இந்த ஆண்டுக்கான சொல்லாக ஃபேக் நியூசைத் தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது. இன்ஸ்டா, யுனிகார்ன், ஆண்டிபா உள்ளிட்ட பல வார்த்தைகளைப் பின்னுக்குத் தள்ளி ஃபேக் நியூஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளதே இதற்குக் காரணம். செய்தி வெளியீடு எனும் போர்வையில் பரப்பப்படும் தவறான தகவல்களைப் பொய்ச் செய்தி என காலின்ஸ் அகராதி குறிப்பிடுகிறது.
மேலும் தகவல்களுக்கு: https://www.collinsdictionary.com/woty