ஒன் ப்ளஸ் 5டி: நவம்பர் 21 முதல் இந்தியாவில் விற்பனை

ஒன் ப்ளஸ் 5டி: நவம்பர் 21 முதல் இந்தியாவில் விற்பனை
Updated on
1 min read

ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடான 5டி, நவம்பர் 21 முதல் இந்தியாவில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன் ப்ளஸ் மொபைல்கள் குறுகிய காலத்தில் மொபைல் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று தனித்துவமாக விளங்கும் பிராண்டாகும். இதன் ஒவ்வொரு மாடலும் மேம்பட்ட தரத்துடனும், வசதியுடனும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தற்போது இதன் அடுத்த மாடலான ஒன்ப்ளஸ் 5டி (OnePlus 5T) நவம்பர் 16 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இந்திய விற்பனை நவம்பர் 21 முதல் அமேசான் மற்றும் ஒன் ப்ளஸ் இணையதளங்களில் நடக்கவுள்ளது. தொடர்ந்து மற்ற தளங்களிலும் மொபைல் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடலில் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 835 சிப்செஸ்ட்டும், 8ஜிபி ராமும் அமைந்துள்ளது. மேலும் 20 மெகாபிக்ஸல் கேமராக்கள் முன்னாலும், பின்னாலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ இயங்குதளத்தில் இந்த மொபைல் இயங்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in