

சோறு வேண்டுமென்றால் விவசாயம் மற்றும் டெக்னாலஜி பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். சமீபத்தில், செயற்கை நுண்ணறிவைச் சுற்றி நிறைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஓப்பன் ஏஐ நிறுவனம் உருவாக்கிய டால்-இ மற்றும் சாட்ஜிபிடி, மைக்ரோசாப்ட் கம்பெனி தனது செயலி ஆபீஸ் 365-ல் உள்ள பிங் தேடுபொறியில் சாட்ஜிபிடி ஒருங்கிணைப்பு, கூகுள் கம்பெனி உருவாக்கிய BARD, செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் உள்ள முக்கியமான நிறுவனங்கள் என்றால் அது கூகுள், மைக்ரோசாப்ட், ஓப்பன் ஏஐ தான்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூகுளின் வருடாந்திர மாநாடு கூட்டம் 2023 மே 10 அன்று, மவுண்டன் வியூவின் ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில் கூகுள் நடத்தியது. மாநாடு கூட்டத்தின் பெயர் I/O 2023. ஏஐ சாட்பாட் BARD இப்போது இந்தியா உள்பட 180 நாடுகளுக்கு பயன்படுத்த அனுமதி கிடைத்து உள்ளது.
பார்ட் (BARD) இந்த ஆண்டு 2023 பிப்ரவரியில் முதன் முதலில் பொதுமக்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டபோது காத்திருப்புப் பட்டியல் வழியாக மட்டுமே அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அணுக முடிந்தது. பார்ட் பயன்படுத்த காத்திருப்புப் பட்டியல் என்ற பேச்சுக்கு இனிமேல் இடம் இல்லை.
ஆரம்ப புள்ளி: கூகுளின் தேடுபொறியில், நீங்கள் கேள்வி கேட்கும் போது, வேண்டிய விடைகளை கொடுத்த பின், அந்த செய்தி உடன் தொடர்புடைய வேறு முக்கியமான சில தகவல்களையும் உங்களுக்கு கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் நினைக்கிறது. அதன் எண்ணத்தின் விளைவு தான் BARD என்ற செயலி. இது செயற்கை அறிவு ஏற்றபட்ட மென்பொருள் செயலி. BARD என்பது கூகுள் கம்பெனி உருவாக்கியது.
Bard? - இது மனிதர்களுடன் உரையாடல் செய்யக்கூடிய செயலி. மனிதர்கள் தங்கள் வினவல்களை தட்டச்சு செய்யலாம் அல்லது கேட்கலாம். கணினி திரையில் இருக்கும் ப்ராம்ப்ட்லில் (prompt) கேட்கப்படும் கேள்விகளுக்கு மனிதரைபோல உரைநடை பதில்களை உருவாக்கி நமக்கு விடையாக BARD தரும்.
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் செயலிகளுக்கு பொதுவான பெயர் என்ன தெரியுமா? பொதுவான பெயர் ஜெனரேட்டிவ் AI என்பது ஆகும். டால்-இ, சாட்ஜிபிடி, பார்ட் எல்லாம் ஜெனரேட்டிவ் ஏஐ தான்.
ஜெனரேட்டிவ் ஏஐ? - புதிய உரை, படங்கள், வீடியோ, ஆடியோ, குறியீடு அல்லது சிந்தடிக் டேட்டா (synthetic data) முதலியவைகளை கணினிபல விதமான செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, கணினி தானாகவே உருவாக்கும் . அத்தகைய கணினி செயலிகளுக்கு ஜெனரேட்டிவ் AI சிஸ்டம் என்று பெயர் .
இந்த பார்ட் செயலி எதை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது? - கணினி கற்றல் (machine learning),இயற்கை மொழி செயலாக்க நுட்பங்கள் (natural language processing techniques).
இந்த அதிகப்படியான தகவல்களை கூகுள் எப்படி உங்களுக்கு கொடுக்கிறது தெரியுமா ? - 'நாராயணமூர்த்தி - இன்போசிஸ்' எந்த ஊர்க்காரர் என்று கூகுள் தேடுபொறியில் தேடினால், அவரது ஊர் பெயரை நமக்கு கொடுதப்பதோடு, அதற்கு பிறகு அவர் தொடர்பு உள்ள வேறு சில தகவல்களையும் கூகுள் நமக்கு தருகிறது அல்லவா? நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றால் கூகுளின் Knowledge Graph Card-க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
நாலேஜ் க்ராப் கார்டு: இதன் மூலமாகத்தான் கூடுதல் தொடர்புடைய தகவல்களை பொதுமக்களுக்கு கொடுத்து அவர்களை Google சந்தோஷப்படுத்துகிறது.
பார்ட் செயலி எப்படி வேலை செய்கிறது?
நல்லது & கெட்டது உண்டு. சிலவற்றை இங்கே பார்க்கலாம்
என்ன இருக்கு சிறப்பு அம்சங்கள்?
செயற்கை நுண்ணறிவு ஆட்டம் ஆரம்பம் ஆகிறது
முதல் வகுப்பு குழந்தை, 'அ.. ஆ..' எழுத்துக்களை , பார்த்து பிரமிப்பு அடைகிறது. நாம் கூட செயற்கை நுண்ணறிவில் வந்த மென்பொருள் செயலிகளை பார்த்து பிரமிப்பு அடைக்கின்றோம். போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. பூமி உயிர்களுக்கு என்ன நடக்குமோ கவலை எழுகிறது. நினைவுக்கு வருகிறது. பாரதியின். புதியன விரும்பு ; பூமி இழந்திடேல்.
- சி.ஆர்.சத்தியமூர்த்தி | டெக் ஆர்வலர் | தொடர்புக்கு callbalaji@yahoo.com